Tamil News

மலையக எழுச்சி பயணம்: மன்னார் நகரை வந்தடைந்தது

மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (30) பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது.

மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை பயணம் ஆரம்பமானது.

காலை 11 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்து மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்தனர்.இதன் போது மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் இணைந்து வரவேற்றனர்.

நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து நான்காவது நாள் பயணமாக முருங்கன் நோக்கி பயணிக்க உள்ளனர்.

மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும்,மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற தொனிப்பொருளில் ‘மலையக எழுச்சிப் பயணம்’ என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவாகும்.

Exit mobile version