Site icon Tamil News

அப்போது போது வாய்திறக்காதவர் இப்போது கருத்து தெரிவிக்கிறார் – கோவிந்தன் கருணாகரம்

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் போட்சிற்றி என்பனவற்றினை சீனாவுக்கு வழங்கியபோது வாய்திறக்காத பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்க நடவடிக்கையெடுக்கும்போது மட்டும் மக்கள் கருத்துப்பெறவேண்டும் என்பது அவரின் ஒரு பக்க செயற்பாட்டினை காட்டுவதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம்.அத்துடன் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும்காலத்திலும் இனவாதத்தினை தூண்டிவிட்டு அரசியல்செய்வது இந்த நாட்டில் வழமையாகிவிட்டது.2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில்வெற்றிபெற்றார்கள்.

எதிர்வரும் ஆண்டும் ஓரு தேர்தல் ஆண்டாகயிருக்கப்போகின்றது.இதனை மையமாகக்கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை சுற்றிவளைக்கவேண்டும் என்றும்,வடகிழக்கில் பௌத்தமதத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என்று இனவாதத்தினை வெளிக்கிளப்பி கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகவும் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.

பாராளுமன்ற உதயகம்பன்வெல கூறுகின்றார் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்னவேலையென்று.வடகிழக்கில் நீங்கள் வந்து அடாத்தாக கூடியேறுகின்றீர்கள்,ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை கம்பன்வெல போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்களே கொழும்பு சிங்கள தலை நகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றால் பாராளுமன்றத்தில் நீங்களே வடக்கு கிழக்கினை பிரித்து எங்களை தனிநாடாக பிரகடனப்படுத்திவிட்டால் எல்லோருக்கும் அதுவசதியாக இருக்கும்.

Exit mobile version