Site icon Tamil News

கனடிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு

கனடாவின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இது இந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் பதிவான அகதிகள் கோரிக்கைகளில் 18 சதவீதத்தை குறிக்கிறது.

அகதி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும், பல கோரிக்கையாளர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை என கனடா எல்லை சேவைகள் முகமையகம் – Canada Border Services Agency (CBSA) – தெரிவிக்கிறது.

கடந்த மாதம் வரை, 28,000க்கும் அதிகமான வெளியேற்ற உத்தரவுகளை CBSA அகதி கோரிக்கையாளர்களுக்கு வழங்கியது.

விமானப் பயணிகளின் அகதி கோரிக்கை அதிகரிப்புக்கான முக்கிய இடமாக Montreal Trudeau சர்வதேச விமான நிலையம் அமைகிறது.

2022 முதல் 2023 வரை அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

Toronto Pearson சர்வதேச விமான நிலையம் அதே காலப்பகுதியில் அகதிகளின் கோரிக்கைகளை மூன்று மடங்கிற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளது.

Exit mobile version