Site icon Tamil News

கனடாவில் நீரிழ் மூழ்கிய யாழ்ப்பாணம் இளைஞர் பலி

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து கனடா சென்ற இளைஞர், நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version