Tamil News

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் புதிய சட்டம் – வெடித்துள்ள சர்ச்சை!

ஈராக்கில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 9ஆகக் குறைக்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. பெண்கள் இளம் வயதில் முறையற்ற உறவுகளில் செல்வதைத் தடுக்கவே இந்தச் சட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது அங்கே மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

அதாவது ஈராக்கில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 9ஆகக் குறைக்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இப்போது அங்கே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக இருக்கும் நிலையில், அதை 9ஆகக் குறைக்க ஈராக் சட்டத்துறை அமைச்சகம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளது. மேலும், குடும்ப விவகாரங்களில் மத போதகர்கள் அல்லது நீதித்துறையை என இரு தரப்பில் யார் முடிவெடுக்கலாம் என்பது குறித்து குடிமக்களே தேர்வு செய்யவும் இந்த மசோதா அனுமதிக்கும்.

அதேநேரம் மத போதகர்களுக்கு இதுபோல அதிகாரத்தைக் கொடுப்பது வாரிசு உரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு விஷயங்களில் பெண்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Iraq proposes a bill to lower the legal marriage age for girls to 9

இந்த சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றப்பட்டால் பெண்களின் திருமண வயது 9ஆகவும் ஆண்களின் திருமண வயது 15 ஆகவும் குறையும். இது குழந்தைத் திருமணம் மற்றும் பெண்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக நடந்த பல தலைமுறை போராட்டத்தை இந்த சட்டம் சீர்குலைக்கும் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மனித உரிமை அமைப்புகள், பெண்கள் உரிமைக் குழுக்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளனர். இது இளம் பெண்களின் கல்வி, உடல்நிலை மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், குழந்தைத் திருமணங்களால் பருவகால கர்ப்பம், குடும்ப வன்முறை மற்றும் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடப்பதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது ஈராக்கை மேலும் பின்னோக்கியே நகர்த்தும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version