Site icon Tamil News

தனது யூடியூப் பக்கத்திற்காக விமானத்தை வெடிக்க செய்த நபர்

யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளது.

டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ‘நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்’ எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

Exit mobile version