Site icon Tamil News

இலங்கையில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த கேரட்டின் விலை : ஒரு கிலோ கேரட் 1100 ரூபாய்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேசத்தில் மரக்கறி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கேரட்டை மொத்தமாக 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரட் மாத்திரம் அன்றி ஏனைய மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக

லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் மொத்த விலையில் ரூ.450-500க்கும், பீன்ஸ், மீன், மிளகாய் மொத்த விலை ரூ.750-800க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ கேரட் 350-400 ரூபாவிற்கும், சீன உணவகங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version