Tamil News

காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் ; 8 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சிகர உண்மை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவரது தயார் ஜானி சந்தனா.இவர் 2015ல் தனது 17 வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா பொலிஸில் புகார் அளித்து உள்ளார்.

திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளியே வந்து உள்ளார். அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி உள்ளார்.

ரூடி இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் தொடர்ந்து பொலிஸாரை ஏமாற்றி வந்து உள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்வலர் குவானெல் எக்ஸ் கூறுகையில்,ரூடியின் தாயார் அவரை ரூடியின் தந்தை போல இருக்குமாறு வற்புறத்தி உள்ளார். ஒரு அடிமையைப் போல வாழ்ந்து வந்து உள்லார். இதனால் 2015ல் ரூடி வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு 2 நாட்களில் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் ரூடியின் தாயார் அவரிடம் இது குறித்து வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார்.

From the India Today archives (2007): How safe is your child from abuse -  India Today

ரூடியை அவரது தாயார் படுக்கையில் தனது அருகில் படுக்க வைத்து அப்பாவைபோல் செய்யவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இது பிடிக்காமல், தப்பிப்பதற்காக ரூடி படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தாயார் ஜேனி, ரூடியை அழைத்து தனது அருகே படுக்க வைத்து கொள்வார். மேலும் ரூடிக்கு போதை மருந்துகளும் அளித்திருக்கிறார். இதனால் பயந்து பொலிஸாரை நாடாமல் இருந்துள்ளார்.

மேலும் அவர் ரூடியை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். ரூடி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு ஆர்வலர் குவானெல் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும், தனது தாயார் சிறைக்கு செல்வதை பரியாஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது

Exit mobile version