Site icon Tamil News

இஸ்ரேலில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கட்டுநாயக்கா கொண்டுவரப்பட்டது!

இஸ்ரேலில் மரணமடைந்த  அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.

சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (28.10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பராமரித்து வந்த திருமதி அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.

ஹமாஸ் தாக்குதலின் போது இஸ்ரேலிய பெண்ணின் உயிரைக் காப்பாற்ற அவர் உழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version