Site icon Tamil News

யாழில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்ற இரா.சாணக்கியன்

தீவுச்சேனையில் இருந்த முகாமில் கடத்தி செல்லப்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டதான தகவல்கள் உள்ள நிலையில் இவை தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்வதன் மூலம் உண்மைகள் வெளிக்கொணரமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு சித்தாண்டியில் 11வது நாளாகவும் போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி பத்தாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) முதல் போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்து, அரசே மயிலத்தமடு,மாதவனையை மேய்ச்சல்தரையாக பிரகடனப்படுத்து போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

இந்தபோராட்டத்தின் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version