Site icon Tamil News

அமெரிக்காவில் Tesla வாகனத்திற்கு நேர்ந்த கதி – தீயை அணைக்க 190,000 லிட்டர் தண்ணீர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் Tesla கனரக வாகனம் திடீரென தீப்பற்றியுள்ளது.

தீயை அணைக்க 190,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகன மின்கலன்களின் சூட்டைத் தீயணைப்பாளர்கள் தணித்தனர்.

சம்பவம் நிகழ்ந்த வட்டாரத்தில் தீ பரவுவதைத் தடுக்கும் ரசாயனங்களை விமானம் வழி தீயணைப்பாளர்கள் பயன்படுத்தினர்.

தீயணைப்புப் பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை 15 மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

கனரக வாகனத்தை Tesla ஊழியர் ஓட்டிக்கொண்டிருந்தார். வீதி வளைந்துகொண்டிருந்தபோது வாகனம் மரம் மீது மோதிப் பின்னர் சரிவில் இறங்கிப் பல மரங்களுக்கு எதிரே நின்றது.

சம்பவத்தில் வாகன ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்.

Exit mobile version