Site icon Tamil News

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : வடகொரியாவின் அதிரடி நடவடிக்கை!

வடகொரியா நேற்று (18.07) அதிகாலை  கிழக்கு கடற்கரையில், இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு முதல் முறையாக தென் கொரியாவில் உள்ள துறைமுகத்திற்கு அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா கொண்டு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கோபத்தின் வெளிப்பாடாக வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது.

இதன்படி பியோங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தளத்தில் இருந்து இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் சுமார் 550 கிலோமீட்டர் வரை பற்ததாக தென்கொரிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஓஹியோ-வகுப்பு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் கென்டக்கி, செவ்வாயன்று தென் கொரிய துறைமுகமான பூசானுக்கு வந்தடைந்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version