Site icon Tamil News

சிங்கப்பூரில் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரக் கனரக வாகனம்!

சிங்கப்பூரின் முதல் மின்சாரக் கனரக வாகனம் சாலைகளில் அடுத்த மாதம் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்கலன்களால் செயல்படும் அந்த வாகனம் அடுத்த மாதத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றது.

25 அடி நீளமுள்ள லாரி lithium மின்கலன்களைக் கொண்டு இயங்குகிறது. ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் அது 180 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 3 முறை பயணம் செய்வதற்கு அது சமம். வாகனத்தை வைத்திருக்கும் DB Schenker நிறுவனம், முற்றிலும் மின் வாகனங்களைக் கொண்டு செயல்பட விரும்புகிறது.

அந்த இலக்கை அடையும் ஒரு படியாக இந்த லொரி அமைகிறது.ஜெர்மனியைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் உள்ளூர் வளாகத்தில் மின்னூட்ட வசதிகள் உள்ளன.

ஆண்டு இறுதிக்குள் மேலும் 2 மின் லாரிகளைப் பெற நிறுவனம் திட்டமிடுகிறது.

Exit mobile version