Site icon Tamil News

சிங்கப்பூர் விமான நிலையத்தில் சீன பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – நாய் என கூறியதால் சர்ச்சை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் உள்ள China Southern ஏர்லைன்ஸ் கவுன்டரில் சோதனையிட்ட பணியாளர்கள் தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், நாய் என்று அழைத்ததாகவும் சீனப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து China Southern ஏர்லைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியதுடன் சம்பவத்திற்கு தொடர்புடைய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீன ஊடகத் தகவல்களுக்கமைய, Yuan என அழைக்கப்படும் பயணி கடந்த செவ்வாயன்று சிங்கப்பூரில் இருந்து Chongqingகிற்கு CZ546 என்ற விமானத்தில் பயணிக்க தயாராகியுள்ளார்.

emergency exitக்கு அருகில் இருக்கைகளுக்கு மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை Yuan உறுதிப்படுத்த விரும்பினார்.

பின்னர் அவர் ஊழியர்களிடம் மாண்டரின் மொழி பேசக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று வினவியுள்ளார்.

ஊழியர்கள் தங்களுக்குள் மாண்டரின் மொழியில் பேசிக் கொண்டிருப்பதை அவதானித்த போதிலும் தன்னிடம் வந்த ஆண் ஊழியர்கள் தான் சொல்வதைப் புரிந்து கொள்ளாதது போல் நடித்ததாகவும், தனது கேள்வியைப் புறக்கணித்ததாகவும் Yuan குறிப்பிட்டுள்ளார்.

Yuan தனது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி விவரங்களை எடுக்கும்போது ஊழியர் அவரை அவமதிக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் ஊழியர் என்னைத் திட்டுவதற்கு மூன்று மொழிகளைப் பயன்படுத்தினார். “நீ ஒரு நாய், உனக்கு மனித மொழி புரியவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக Yuan குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த ஊழியரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version