Site icon Tamil News

ஏரியில் விழுந்த வரை மனித சங்கிலியில் மீட்ட வாலிபர்கள்

போரூர் ஏரியில் ஒருவர் தவறி விழுந்து கரையை பிடித்தபடி மேலே வர முடியாமல் உயிருக்கு போராடி கொண்டு இருந்தபடி அலறினார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற வாலிபர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அவரை மீட்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

வாலிபர்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் நீரில் விழுந்தவரை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால் உடனடியாக சரிவான அந்த பகுதியில் வாலிபர்கள் ஒன்றிணைந்து ஒருவர் கையை ஒருவர் பிடித்து மனித சங்கிலி போல் இணைந்து சரிவான அந்த பகுதியில் நின்று ஏரியில் இருந்த நபரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

ஏரியிலிருந்து மீட்கப்பட்ட அந்த நபர் தன்னை மீட்ட வாலிபர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

மேலும் அவரது பெயர் முத்து என்பதும் 60 வயதான அவர் தண்ணீர் குடிக்கலாம் என ஏரியில் இறங்கிய போது கால் தடுமாறி ஏரியில் விழுந்ததாகவும் கூறினார்.

இந்த வாலிபர்கள் தன்னை காப்பாற்றவில்லை என்றால் இறந்து போய் இருப்பேன் என கண்ணீருடன் உருக்கமாக கூறினார்.

அந்த நபருக்கு ஏற்கனவே காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சாலையில் அடிபட்டு கிடந்தாலும் சிலர் பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் காலகட்டத்தில் ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நபரை சற்றும் யோசிக்காமல் காப்பாற்றிய வாலிபர்கள்.

அப்துல் ரஹீம்(36), ரஞ்சித்(29), முபாரக்,(20) விக்னேஷ்(19) தங்களது உயிரை பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பகுதியில் முறையான தடுப்புகள் இல்லாததால் இது போல் சிலர் உள்ளே வந்து விழுந்து விடுவதாகவும் ஏரியின் கரைகளில் தடுப்புகள் முறையாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version