Site icon Tamil News

ரோயல் செல்ஃபி எடுத்துக்கொண்ட டெய்லர் ஸ்விஃப்ட்

பிரிட்டனின் பட்டத்து இளவரசர் வில்லியமும் லண்டனில் பிரபல அமெரிக்க பாப் பாடகி டைலர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கச்சேரிக்கு இளவரசர் வில்லியம் அவரது பத்து வயது மகன் ஜார்ஜ் மற்றும் ஒன்பது வயது மகள் சார்லட் ஆகியோருடன் இணைந்ததாக கூறப்படுகிறது.

கச்சேரிக்கு முன், அவர்கள் பாடகர் டைலர் ஸ்விஃப்ட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க அவர்கள் மறக்கவில்லை.

கென்சிங்டன் அரண்மனை, இந்த புகைப்படத்தை எக்ஸ்  சமூக ஊடகங்களில் வெளியிட்டது மற்றும் அரச குடும்பத்திற்கு ஒரு அற்புதமான மாலை பொழுது இருந்ததாகவும்  அதற்கு பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்க்கு நன்றியுமு் தெரிவித்தார்.

இளவரசர் வில்லியமின் 42வது பிறந்தநாள் ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்டது. அன்று அவர்கள் கச்சேரியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version