Site icon Tamil News

15 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவரை படுகொலைச் செய்ய சூழ்ச்சி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 15 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான ஆரூரன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

ஆரூரன் உதவி காவல்துறைஅதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் வழங்கியதனை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.

இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவா் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி கோட்டாபய ராஜபக்ச, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, மேற்கொள்ளப்பட்ட குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிவலிங்கம் ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version