Site icon Tamil News

நேஷனல் எக்ஸிட் தேர்வு முறையினைக் கைவிடக் கோரி தமிழக அரசு வேண்டுகோள்!

நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்  என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும்,  முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள  நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்  என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில்  நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  நேஷனல் எக்ஸிட்  தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும்,  மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த  தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version