Site icon Tamil News

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவிப்பு!

இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி இந்தியாவில் இனி இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.  வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர், இரண்டாயிரம் ரூபாய்   நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PR257180523ALL BANKS64E5FDBEBAE14112A3ACE71F04AE5E2F[1]

இதேவேளை இதற்கு முன்பதாக கடந்த  2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியற்றதாகியது.

அப்போது வெளியாகிய அறிவிப்பு ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்திருந்தது. அந்த சமயத்தில் டிஜிக்டல் பணப் பரிவர்தனையும் இல்லாதமையால் மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கினர்.

இருப்பினும் தற்போது 2000 ரூபாயை திரும்பப் பெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் வங்கிகளில் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

மேலும் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்து பல்வேறு மீம்ஸ்களையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த மீம்ஸ்கள் சிலவற்றை நீங்கள் இங்கு பார்க்கலாம்.

 

Exit mobile version