Tamil News

மல்யுத்த வீரர்களுக்கு எதிரான வன்முறை- உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்தியாவில் மல்யுத்த வீராங்கனைகள் மீதான துஷ்பிரயோகத்திற்கு, எதிரான போராட்டத்திற்கு உலக மல்யுத்த அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக அமைச்சருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர்.

அப்போது பொலிஸார் அவர்களை கடுமையாக தாக்கியதோடு, பேரணியை கலைத்து வீரர், வீராங்கனைகளை கைது செய்து, போராட்டத்தை தடுத்து நிறுத்தினர்.இதனிடையே துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக அமைச்சரை கைது செய்ய அரசு மறுத்ததை அடுத்து , தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர்.

மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு எதிரான வன்முறை: உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் | Indian Wrestlers Strike Condemned World Wrestling

இதனை விவசாய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, பாஜக அமைச்சரை கைது செய்ய கோரி மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.இந்நிலையில் நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு, உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.மேலும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம், என உலக மல்யுத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version