Site icon Tamil News

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காக்கள் அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது,

ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர்.

இது ஏற்கனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

 

 

Exit mobile version