Site icon Tamil News

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – அமுலுக்கு வரும் புதிய சட்டம்

ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு விபத்து ஒன்று நடைபெற்ற நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி சென்றால் வழங்கப்படும் தண்டனை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நீதி அமைச்சர் புஷ்வான் அவர்கள் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி ஒரு கருத்தை பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதாவது எவர் ஒருவர் வாகன ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த வாகன விபத்தில் ஒரு நபருக்கு காயத்தை ஏற்படுத்தாது விபத்தை ஏற்படுத்திய நபர் விபத்து நடந்த இடத்தில் இருந்து வானத்துடன் தப்பி ஓடும் பொழுது இந்த மாதிரியான விடயங்களை சட்ட விரோதமான நடவடிக்கையாக கையாள கூடாத என்ற வகையில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு தான் ஆலோசித்து வருவதாக கூறியிருக்கின்றார்.

இதேவேளையில் எவர் ஒருவர் மற்றைய நபருக்கு வாகன விபத்தின் பொழுது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தினால் அந்த விடயத்தில் அது சட்ட விரோதமான செயற்பாடாக கருதப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில் இந்த விடயத்தில் பல அமைப்புகளுடைய கருத்துக்களை தான் உள் வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் ஜெர்மனிய இணையத்தள செய்தியில் கருத்து தெரிவிக்கையில் கூறியிருக்கின்றார்.

Exit mobile version