Site icon Tamil News

நிலத்தடி நீர் குறித்து சுவீடன் விவசாய பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து

நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் உலகத்தில் அல்லல் படுகின்ற வேறு சமூகங்களைப் போன்று நாங்களும் அல்லல் படுபவர்களாக இருப்போம் என சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணப் நேற்றைய தினம்(9-9-23) யாழ்.தெல்லிப்பழையில் இருந்து அராலி நோக்கி இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணம் மற்றய மாகாணங்களை விட வித்தியாசமானது, முற்றுமுழுதாக மழையில் இருந்து பெறப்படுகின்ற நிலத்தடி நீரை எங்களுடைய தேவைக்காக பயன்படுத்திய வரலாற்றை கொண்டவர்கள் நாங்கள். நிலத்துக்கு மேல் உள்ள நீர்த் தேக்கங்கள் வன்னி பிரதேசங்களில் விவசாயத்துக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், காலம் காலமாக கோவில்களை அண்டிய பகுதிகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்ட குளங்கள் எங்களுடைய நீர்த் தேவைகளை காலநிலைக்கு ஏற்ப கொடுத்து வந்தவையாக இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளில் இந்த நீர் தேக்கங்கள், நீர் நிலைகள், கேணிகள் மற்றும் குளங்கள் உரிய அக்கரை செலுத்தி பேனப்படாத காரணத்தினால் கண்ணின் உள்ளே செல்லுகின்ற மழைவீழ்ச்சியினுடைய அளவு மிக குன்றிய நிலையில் பெருமளவு நீர் கடலுக்கு சென்று விரயமாகின்றது என சொல்லலாம்.

இதை விட நாங்கள் யுத்தத்திற்கு பின்னான இன்றைய காலத்தில் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உடையவர்களாக விரைவாக பெரிய பகுதிகளில் நகர மயமாக்குதல் நடைபெறுகிறது கண்கூடாக தெரிகிறது. இந்த நகரமயமாகுதல் உடைய ஒரு பக்க விளைவு மண் மூடப்படுகிறது, மழைநீர் செல்ல வேண்டிய பாதைகள் சீல் பன்னப் படுகின்றன, இதை அவதானத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் சில உரையாடல்களை நடத்தி இருந்தோம்.

இங்கு இரண்டு கருத்து நிலைகள் உள்ளன ஒன்று பெய்கின்ற மழை போதுமானது அதை உரிய வழியில் பாதுகாத்தால் நிலத்தடி நீர் பேணப்படும். இதன் மூலம் எங்களுடைய குடிநீர் தேவையும் விவசாயத் தேவையும் இப்போது இருப்பதை விட இன்னும் திறமையான இடத்திற்கு போகலாம் என்பது எங்களுடைய நிலை,

இன்னும் ஒரு நிலை இங்கு இருக்கின்ற நீர் அளவு குன்றி இருக்கின்றது, உவர் அடையப் போகின்றது, அசுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நீர் பாதுகாப்பற்ற நீர் இதனை நாங்கள் குடிபாவனைக்கு பாவிக்க முடியாது, ஆனபடியால் நாங்கள் இதனை வடித்தெடுக்க வேண்டும். அல்லது வடித்தடுத்த நீருக்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பது இன்னும் ஒரு நிலை, இந்த நிலையில் இருந்து இரண்டாவதாக சொன்ன நிலையை நோக்கி நாங்கள் திடமாக போவோமாக இருந்தால் உலகத்தில் அல்ல படுகின்ற வேறு சமூகங்களைப் போல நாங்கள் அல்லல் படுபவர்களாக இருப்போம்.

என்னுடைய பார்வையில் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் அக்கறை கொண்ட சமூகமாக அறிவை சரியாகப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த நீரை தூய்மையானதாகவும்அசுத்தமடையாமல் இருப்பதற்காகவும், எங்களுடைய விவசாய வழிமுறைகள் சிலவற்றை கேள்விக்குள்ளாக்கி மாற்றி அமைப்போமானால் நச்சுப் பொருட்கள் கலப்பதை தவிர்க்கலாம்.

இந்த உலகளாவிய மாற்றம் ஒரு பக்கம் இருக்க முழு பூமியையும் பாதிக்கின்ற காலநிலை உச்சங்களும் பெய்கின்ற மலையின் அளவை இயல்புக்கு இருந்து மாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் எங்களுக்கு தெரியாத பல கேள்விகளும் இங்கே இருக்கின்றது, இப்போதைக்கு தெரிந்த அறிவை பயன்படுத்தி எங்களால் இயன்ற முயற்சிகளை செய்வதன் மூலம் இருப்பதைப் பேனலாம், இன்னும் வளப்படுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version