Site icon Tamil News

பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தும் சுனக் : எழுந்துள்ள புதிய சர்ச்சை!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனியார் விமானமொன்றில் பயணம் காணொளி வெளியாகி சர்சையை தோற்றுவித்துள்ளது.

டெவோன் மற்றும் கார்ன்வாலுக்கு ஒரு பிரச்சாரப் பயணத்திற்கு சென்ற அவர், அங்கு ரயில் பயணம் குறித்தும், அந்த அற்புதமான பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவர், தனியார் ஹெலிகாப்படரில் திரும்பி வந்துள்ளார். அதேபோல் பயணத்திற்காக அவர் £750 பெறுமதியான பயணப்பையை பயன்படுத்தியதையும் சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ளன.

மேலும் பிரதமரின் கவச ஆடி கார் மற்றும் போலீஸ் துணையுடன் லண்டனின் பேட்டர்சீ ஹெலிபோர்ட்டில் காத்திருப்பதையும் சர்வதேச ஊடகங்கள் படம்பிடித்துள்ளன.

ஹொனிடனில் இருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுகின்றன மற்றும் வெறும் 3 மணிநேரம் ஆகும் – ஒரு நிலையான இருக்கைக்கு £55 செலவாகும்.

இருப்பினும் பிரதமர் தனியார் ஹெலிகாப்டரை பயன்படுத்தியிருப்பது பலரின் கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொழிற்கட்சியின் உறுப்பினர் ஒருவர் ரிஷி சுனக் எத்தனை முறை ஹெலிகாப்டரில் நாட்டை சுற்றிவருகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் பிரச்சாரத்தின் முதல் நாளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்திற்காக ஈஸ்டர்ன் ஏர்வேஸ் ஜெட்ஸ்ட்ரீம் 41 டர்போபிராப் விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் தனது சொந்த நிதியில் இருந்து செலவிடப்படுகிறதா? அல்லது மக்களின் வரிப்பணத்தில் இவ்வாறான பயணங்களை அவர் மேற்கொள்கிறாரா என்பதை சர்வசேத ஊடகங்கள் படம்பிடித்து காட்டுகின்றன.

தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், சுனக்கின் இந்த ஆடம்பர பயணங்கள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

Exit mobile version