Site icon Tamil News

ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசி

ஐரோப்பாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்புமருந்து குறைந்தது 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவால் ஐரோப்பிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் COVID-19, Influenza தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிக முக்கியம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நோய்ப்பரவலால் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சில ஐரோப்பிய நாடுகளில் COVID-19 பரவல் மீண்டும் தலைதூக்குகிறது. ஒரே நேரத்தில் மற்ற சுவாச நோய்களும் பரவுகின்றன என்று அண்மைத் தரவுகள் காட்டுகின்றன.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை நேரத்தோடு போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத்தைச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய வட்டார இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் குலூஜ் டுத்துக்கூறினார்.

 

Exit mobile version