Tamil News

ஐ.நா அலுவலகத்தில் கோரிக்கை மனு கையளிப்பு

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவுக்குக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு திங்கட்கிழமை(02) கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ்ஸிற்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை மனு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச்சிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, நேற்றையதினம் (04)புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கையளிக்கப்பட்டது.

Exit mobile version