Tamil News

மல்லாவியில் தியாக தீபம் திலீபனுக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட உணர்வு பூர்வ அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்து, வடக்கு மாகாணத்தின், பல்வேறு பகுதிகளுக்கும், சென்று வருகின்றது.

அந்தவகையில் இன்று எட்டாவது நாள் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி பவனியானது மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவியை வந்தடைந்து மல்லாவியினுடைய பல்வேறு பகுதிகளிற்கும் பாண்டியன்குளம் உள்ளிட்ட பகுதிகளிற்கும் சென்று மக்களது அஞ்சலியை தொடர்ந்து இன்றைய எட்டாம்நாள் பயணம் மல்லாவியுடன் நிறைவு பெற்றது.

நாளையதினம் வடமராட்சி கிழக்கில், இந்த ஊர்தி பவனி மக்கள் அஞ்சலிக்காக செல்ல இருக்கின்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மல்லாவிக்கு வருகை தந்த ஊர்திக்கு, இன்றைய தினம் மல்லாவி, துணுக்காய், மாந்தை கிழக்கு, பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, பல்வேறு இடங்களிலும் மக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி இருந்தனர்

Exit mobile version