Site icon Tamil News

ட்ரோன் மூலம் வானில் வர்ணஜாலம் காட்டிய மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு பிரத்தியேகமாக இடம் உருவாக்கப்பட்டு வரிசையாக ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் வைத்து அதற்கு கீழ் பகுதியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் அடுக்கடுக்காக மேலே பறக்க ஆரம்பித்தது.

அவ்வாறு பறந்த ட்ரோன்கள் வெறும் வெளிச்சம் மட்டுமே கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்போதுதான் வானில் வர்ணஜாலத்தை காட்ட ஆரம்பித்தது.

குறிப்பாக 200 ட்ரோன்களை வைத்து வித விதமாக வானில் வர்ணஜாலம் காட்ட ஆரம்பித்தனர்.

ட்ரோன்களை வைத்து அப்துல் கலாம் உருவம்,நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஆகியோரது உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்தனர்.

மேலும் ஹாய் என தமிழில் எழுதப்பட்ட எழுத்தும் தெரிந்தது.200 ட்ரோன்களிலும் வண்ண,வண்ண விளக்குகள் அனைந்து எரிந்ததால் வண்ணக்கோலம் இட்டது போல் வர்ணஜாலமாய் தெரிந்தது.

வானில் 200 ட்ரோன்கள் வர்ணஜாலம் காட்ட தொடங்கிய நேரம் மாணவர்களும்,பொதுமக்களும் மெய்மறந்து வானத்தை அன்னார்ந்து பார்த்தபடி ரசித்து தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர்.

இறுதியாக வானில் ஏற்றப்பட்ட 200 ட்ரோன்களும் மெல்ல, மெல்ல ஒவ்வொன்றாக கீழே இறக்கப்பட்டது,

அதனை பார்ப்பதற்கு விண்ணில் இருந்து நட்சத்திரங்கள் நேரடியாக பூமிக்கு வந்து விழுவது போல் இருந்தது.

ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை விண்ணில் பறக்க விட்டு வர்ணஜாலம் காட்டியது,அந்த பகுதி மக்களிடையேயும், மாணவர்களிடமும் பெரும் மகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

Exit mobile version