Tamil News

டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவின் 2ம் பதிப்பில் இவ் ஆண்டுக்கான மாணவர் முயற்சியாளர் விருது

ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 நிகழ்ச்சியில் – மாணவர்களின் கண்ணைக் கவர்ந்த லேசர் ஷோ.கோவை பட்டினம் பகுதியில் உள்ள SSVM நிறுவனங்கள் ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023″க்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் இருந்து ஏண்டர் பிரனவ்,டிஜிட்டல் கிரியேட்டர்,போர்ட் கம்பெனியின் CEO ,காமெடி”என பல்வேறு துறைகளில் இருந்து வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இதனை தொடர்ந்து 15″ நிமிடங்களுக்கு மேலாக லேசர் சோ நிகழ்ச்சி ஒன்று காண்போரை கவரும் வண்ணம் இருந்தது. இதனை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.

தொடர்ந்து முதலும் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்த கிஷன் தாஸ் மாணவர்களுடன் சமூக வலைதளங்கள் பற்றி கருத்துகளை பகிர்ந்து கொண்டு மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன்கள் அவர்களின் திறமையை வெளிப்படையச் செய்கின்றது மேலும் மாணவர்கள் அனைவரும் இந்தத் துறையில் தான் இல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்று எண்ணச் செய்கின்றது அவர்களின் கேள்வி திறனை பார்க்கும்போது என்று இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டுக்கான சவால்கள் மற்றும் சமூக மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் புதுமையான வணிக யோசனைகள் மற்றும் மாதிரிகளை உருவாக்குவதை குறிப்பிடத்தக்க சமர்ப்பிப்புகளில் 15″விதிவிலக்கான மற்றும் புதுமையான அங்கீகாரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது இளம் மாணவர்களின் அற்புதமான திறமைகள் மற்றும் படைப்பாற்றல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் மாணவர்களின் வயதை மற்றும் பின்னணி படுத்தாமல் அவர்களை முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version