Site icon Tamil News

கடந்த ஆண்டில் 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீட்டை சந்தித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

இலங்கை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டில் (2022) 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீடை சந்தித்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மதிப்பில் சுமார் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2021 இல் பதிவுசெய்யப்பட்ட இழப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், நஷ்டமடைந்து வரும் 52 அரச நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனமானது அதன் வரலாற்றில், 1998 மற்றும் 2008 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் மாத்திரமே குறித்த நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version