Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – மகனை அடித்துக் கொலை செய்த தந்தை

இந்துருவ, அட்டவலவத்த சுனாமி கிராமத்தில் தந்தையால் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்துருவ, அட்டவலவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகனின் கழுத்தை அறுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மகனை பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது 65 வயதுடைய சந்தேக நபரான தந்தை விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Exit mobile version