Site icon Tamil News

புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க வம்சாவளி இலங்கையர்கள்

புத்தளம் சீரம்பியாடி பிரதேசத்தில் வசிக்கும் ஆபிரிக்க வம்சாவளி இலங்கையர்களுக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய கலாசார நிலையம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சிறம்பியாடி உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை சனத்தொகை தொடர்பிலான ஆய்வுக்காக அமைச்சர் அப்பகுதிக்கு சென்ற போது, ​​அமைச்சர் இந்த சான்றிதழை வழங்கினார்.

சுற்றுலாத்துறைக்காக இந்த சனத்தொகைக் குழுவின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறவும், அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அவர்களின் கலாச்சார நடவடிக்கைகளைத் தொடர தேவையான பங்களிப்பை வழங்கவும் இந்த கலாச்சார மையம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை மக்களின் வரலாறு, தொழில் நிலைமைகள் மற்றும் கலாசார அம்சங்கள் தொடர்பாக அமைச்சர் அங்கு வாழும் முதியவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டதுடன் இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

Exit mobile version