Site icon Tamil News

மலேசியாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள்!! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அண்மையில் மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித், வழக்குத் தீர்க்கப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், நான்கு சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் – பெட்டாலிங் ஜெயாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சாத்தியமான விசாரணையில் சாட்சிகளாக இருக்க முடியும் என்றும் அல்லாவுதீன் கூறினார்.

ஐந்து அறைகள் கொண்ட இந்த வீட்டை 40 வயதுடைய இலங்கை தம்பதியரும், 20 வயதுடைய அவர்களது மகனும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகளும் வாடகைக்கு எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

உயிரிழந்த மூவரும் குத்தகைதாரர்கள் மற்றும் மகன் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தன்று பெற்றோர் வீட்டில் இருந்திருக்கவில்லை.

இரண்டு குத்தகைதாரர்களுக்கு இடையே சண்டை நடந்ததாக பொலி சார் நம்பினர்.

கொலை நடந்த அதே நாளில், செப்டம்பர் 22 அன்று, கொலை தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்காக எட்டு பேரை பொலிசார் கைது செய்தனர். இந்தக் குழுவில் இரண்டு பிரதான சந்தேக நபர்களும், பெற்றோர்களும் அடங்குவர்.

பின்னர் செப்டம்பர் 30 ஆம் திகதி ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து போது உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version