Site icon Tamil News

இலங்கை இனியும் வேறு நாடுகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது – ரணில்!

இலங்கையின் பொருளாதாரத்தை முற்றாக மறுசீரமைக்க தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும், போட்டியை எதிர்கொண்டு புதிய சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளின் பாதையை பின்பற்றுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரலியகஹா மன்றில் ‘இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்குநிலை’ என்ற தலைப்பில் நடைபெற்ற அறிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை இனியும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது எனவும், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செய்தது போன்று உள்ள வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக தனித்து நிற்க முயற்சிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version