Site icon Tamil News

எங்கு நடந்தாலும் குற்றம் குற்றமே : கஜேந்திரகுமார் விவகாரத்தில் காட்டமாக கருத்து தெரிவித்த மஹிந்த அமரவீர!

தெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரைக்குப் பதிலளித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சம்பவத்தினால் நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

ஆனால்  நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரை அச்சுறுத்தியது மட்டும் சரியா? கடமையை செய்யும் ஒரு பொலிஸாருக்கு இடையூறு விளைவிப்பது சரியா? இதே சம்பவம் தெற்கில் இடம்பெற்றிருந்தால் இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்திருப்பார்கள்.

தெற்கில் இடம்பெற்றாலும் வடக்கில் இடம்பெற்றாலும் குற்றம் குற்றமாகத் தான் கருதப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முடியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அதற்கென ஒரு ஒழுங்குவிதிகள் உள்ளன. வடக்கிற்கு என்று வேறு சட்டங்கள் இங்கு இல்லை.

இப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளினால்தான் முதலீட்டார்கள் நாட்டுக்கு எப்படியும் வருகை தர மாட்டார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version