Site icon Tamil News

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் குறித்து விசாரணை : மருதங்கேணி பொலிஸாருக்கு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பகுதியில் கடந்த 3 ஆம் திகதியன்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் காண்பிக்காத ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொள்ள மருதங்கேணி பொலிஸாருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version