Site icon Tamil News

இலங்கை : மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட  யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1ஆம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாடு சிறப்பு மருத்துவர்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை இழந்துள்ளதுடன், 5,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 20 சிறிய வைத்தியசாலைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகள் முடங்கும் அபாயம் காணப்படுவதாக சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.

Exit mobile version