Site icon Tamil News

2024ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

2024ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதென பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது.

30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் ஃப்ளாஷ் பேக் என்ற நிறுவனத்தின் அண்மைய கணக்கெடுப்புக்கமைய இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் தனிப் பயணிகளுக்கு நான்காவது மிகவும் பிரபலமான இடமான இலங்கை, பயணிகளுக்கு மெதுவான தொடருந்து பயணம் உள்ளிட்ட முக்கிய பயணப் போக்கை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதன் பின்னர், இலங்கை மீண்டும் ஒரு பாரிய மீட்சியை நோக்கி முன்னேறிவருகின்ற நிலையில் இந்த தரப்படுத்தல் மேலும் பல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான், அர்ஜென்டினா, எகிப்து, கொலம்பியா, ஈக்வடோர், ஜோர்தான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பாலி தீவுகளுக்கு மத்தியில் இலங்கை நான்காவது நாடாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version