Tamil News

யூதர்களை போல் வளர்ச்சியடைந்தால் இலங்கையை ஆளமுடியும் – இராஜாங்க அமைச்சர்

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்யமுடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

 

இன்று உலகளவில் சிறு பிரிவினராகயிருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யூதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் உயர்தர மாணவர்களுக்கான வர்த்தக பிரிவு கற்கைநெறியினை ஆரம்பித்து வகுப்பறையினையும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.பற்றிக் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு வர்த்தக பிரிவு வகுப்பறைனை திறந்துவைத்தார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக குறித்த பாடசாலையில் உயர்தர பிரிவுக்கான வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


மக்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம என்பனவும் இடம்பெற்றது. இதன்போது அன்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Exit mobile version