Site icon Tamil News

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளம்

அயோத்திக்கென சிறப்பு வானிலை இணையதளத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தொடக்கியுள்ளது.

அயோத்தி மற்றும் அதன் அருகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பற்றிய வானிலை நிலவரங்களை அறிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

தற்போது, இந்த இணையதளத்தில் அயோத்தி, பிரயாக்ராஜ், வாராணசி, லக்னௌ, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளின் வானிலை நிலவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், அந்தப் பகுதியின் வெப்பநிலை, காற்றின் திசை, காற்றின் வேகம், மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அம்சமாக, உலகம் முழுவதும் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளான ஹிந்தி, ஆங்கிலம், உருது, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை நிலவரமும், சூரிய உதயம், சூரியன் மறையும் நேரங்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் வரும் 22-ஆம் திகதி மூலவா் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version