Tamil News

நாடு கடத்தப்படவுள்ள மாணவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் வெளியான தகவல்

கனடாவிலிருந்து 700 இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில், சில மாணவர்களின் நாடுகடத்துதலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.

அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அவர்கள் அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியது.இந்நிலையில், 700 மாணவர்களில் சில மாணவர்களின் நாடுகடத்தலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்துள்ளார்கள்.

He came to Canada with a college acceptance in hand. Next week, he's  scheduled for deportation | CBC News

இந்திய தரப்பில் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கரும், கனடா அதிகாரிகளும் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நிலையில், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, இந்த மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

அரசின் நோக்கம் இந்த மோசடியின் பின்னணியிலுள்ள மோசடியாளர்களின் முகமூடிகளைக் கிழிப்பதுதானேயொழிய, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களைத் தண்டிப்பது அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் அமைச்சர்.அத்துடன், கனடாவுக்கு சர்வதேச மாணவர்கள் அளிக்கும் குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பைத் தான் அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள Sean Fraser, அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு உதவ தான் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version