Tamil News

கோவை : நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை டவுன்ஹால் பகுதியில் பரிசு புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் துவங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடத்தப்பட்டது.

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார்.குழந்தை இயேசு உருவமொம்மை அனைவரிடமும் தூக்கி காட்டி குழந்தை ஏசு பிறப்பை தேவாலயத்தில் அவர் அறிவித்தார்.

பின்னர் அதனை குடிலில் வைத்த பின் ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை மறைமாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் நடத்தினார்.இந்த சிறப்பு பிராத்தனை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக பேட்டியளித்த மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறியதாவது.ஆண்டவர் மனித அவதாரம் எடுத்தநாள் இன்று எனவும்,நாட்டில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும், போராட்டங்கள் போர் போன்றவை ஒழிய வேண்டும் எனவும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சமாதானம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என இந்த சிறப்பு திருப்பலியில் வேண்டுதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருவதாகவும் , கிறிஸ்துமஸ் கேக் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு, பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்டு சிறப்பாக பண்டிகையினை கொண்டாட இருப்பதாக தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version