Site icon Tamil News

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் ஜனாதிபதி

ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அவர் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இம்முறை ஜி20 மாநாட்டில் ஸ்பெயின் சார்பில் துணை ஜனாதிபதி நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் இந்த ஆண்டு G20 உச்சிமாநாட்டில் இருந்து விலகும் மூன்றாவது அரச தலைவர் ஆவார், அதே நேரத்தில் ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோர் உச்சிமாநாட்டில் சேர மாட்டார்கள் என்று முன்னர் கூறியிருந்தனர்.

Exit mobile version