Site icon Tamil News

வீட்டில் விழுந்த விண்வெளி சிதைவு: நாசா-விடமிருந்து 100,000 டொலர் பெற முயற்சி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் வீடு ஒன்றின் கூரையைக் கிழித்து சிறிய விண்வெளி சிதைவுத் துண்டு ஒன்று விழுந்தது.

அதனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அமெரிக்க, வான்வெளி, விண்வெளி அமைப்பு (நாசா) 80,000 டொலர் தொகையைத் தங்களுக்கு இழப்பீடாகத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சட்ட நிறுவனம் ஒன்று வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 21) இத்தகவலை வெளியிட்டது.

இந்த விவகாரத்தை நாசா கையாளும் விதம், வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்களுக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் எவ்வாறு கையாளப்படும் என்பதை நிர்ணயிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதியன்று ஃபுளோரிடாவில் உள்ள நேப்பல்ஸ் நகரில் 700 கிராம் எடைகொண்ட விண்வெளிச் சிதைவுத் துண்டு அலெஹாண்ட்ரோ ஒட்டேரோவின் வீட்டிற்கு மேல் விழுந்தது. அதனால் வீட்டின் கூரையில் துவாரம் உருவானது.

அந்த சிதைவுத் துண்டு, பயன்படுத்தப்பட்ட மின்கலன்களைக் கொண்ட சரக்குப் பொட்டலத்தில் இருந்த ஒன்று என நாசா பின்னர் உறுதிப்படுத்தியது. அந்தப் பொட்டலத்தை நாசா, 2021ஆம் ஆண்டில் அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து கழிவாக அகற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உலகின் வளி மண்டல சுற்றுவட்டாரத்தில் நுழைவதற்கு முன்பு கழிவு முழுமையாக உடைந்துபோகாததால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நாசா குறிப்பிட்டது.

Exit mobile version