Site icon Tamil News

மாஸ் ஆக்ஷனில் களமிறங்கும் ஜெயம் ரவி – வெளியான சைரன் பட டீசர்

யம் ரவியின் சைரன் திரைப்பட டீஸர் நேற்று வெளியானது. பிரபல இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, இரு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி உள்ள டீசரின்படி ஜெயம் ரவி சிறைச்சாலையில் இருந்து சுமார் 14 ஆண்டுகள் கழித்து பரோலில் வெளியே வருகிறார். அப்பொழுது அவருக்கு நடக்கும் சம்பவங்களின் கோர்வை தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Exit mobile version