Tamil News

லியோவில் இலங்கைப் பிரபலம் ஜனனி… இணையத்தில் வைரலாகும் கிளிக்ஸ்…

விஜயின் லியோ படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடித்திருக்கும் தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் சில எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு பல கோடி புக்கிங் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மத்தியில் ஜனனியும் ஒருவர்.

இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனனிக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள்.

நிகழ்ச்சியின் இவர் அமுதவாணனின் கைப்பாவையாக இருந்தார் என்று பல சர்ச்சைகள் எழுந்தது. இருந்தாலும் ஜனனி முழு முயற்சியுடன் விளையாடியிருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இவர் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லியோ படத்தில் பிக் பாஸ் ஜனனி நடித்திருந்த காட்சியின் புகைப்படம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம பிக் பாஸ் ஜனனி ஆச்சே என்று உற்சாகத்தில் கமெண்ட் போட்டு புகைப்படத்துக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Exit mobile version