Tamil News

நேற்று வெளியான “கேப்டன் மில்லர்” முதல்பார்வை படைத்த சாதனை

தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. இதையடுத்து, தனுஷ் படங்களில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அவர் நடித்து இதற்கு முன்பு வெளியான ‘கர்ணன்’ படத்தின் முதல் பார்வை 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் லைக்குகளைப் பெற்றது. நேற்று வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பார்வை, தனுஷின் டுவிட்டர் கணக்கில், 20 மணி நேரத்திலேயே 97 ஆயிரம் லைக்குகளைக் கடந்துள்ளது. தற்போது 1.2 மில்லியன் லைக்குகளை தொட்டுள்ளது. தமிழ் சினிமாவில் டுவிட்டர் தளத்தில் அதிக லைக்குகளைப் பெற்ற முதல் பார்வை என்ற சாதனையை விஜய்யின் ‘லியோ’ போஸ்டர் படைத்தது. விஜய்யின் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்ட அப்படத்தின் முதல் பார்வைக்கு 24 மணி நேரத்தில் 2,95,00 லைக்குகள் கிடைத்தது. கடந்த ஜுன் மாதம் 22ம் தேதி வெளியான அந்த போஸ்டர் தற்போது 3,19,000 லைக்குகளைக் கடந்துள்ளது.
Exit mobile version