Site icon Tamil News

கனடாவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கனடாவில் கெலோனாவில் மத்திய ஒகனகன் பகுதியில் செயல்பட்டு வரும் ரட்லாண்ட் மேல்நிலைப் பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த 17 வயது சீக்கிம் மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளது.

இவர் பேரூந்துக்காக அப்பகுதி முன்பாக காத்திருந்துள்ளார். அப்போது இரண்டு கனடா நாட்டவர்கள் மாணவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த மாணவர் பேருந்தில் ஏறியதும், அவர்களும் உள்ளே எறியுள்ளனர். ஆனால் மாணவரை வாய்மொழியாக மிரட்டி, பின்னர் பேருந்தை விட்டு கிழே இறங்கியுள்ளனர். இறங்கிய அந்த இந்திய மாணவரை அந்த கும்பல் தாக்க தொடங்கியுள்ளது.

பேருந்து முன்னரே அந்த மாணவரை கும்பல் தாக்கியுள்ளது. மேலும் மிளகாய் பொடி போன்றவற்றை அந்த மாணவர் மீது தூவி காயப்படுத்தியுள்ளது.

இதனை தடுக்க முயன்ற ஒரு மாணவியும் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பலர் மொபைல் போன்களில் பதிவு செய்தனர் என்று கனடாவின் உலக சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.

கெலோனாவில் இந்திய நாட்டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், மேலும் இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது என்றும் இந்திய துணைத் தூதரகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Exit mobile version