Site icon Tamil News

காஸா மீதான தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் கண்டனம்

கடந்த புதன்கிழமை இரவு காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை அழித்துவிட்டு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பியது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் காஸா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் காஸா பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்சா யூசப் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதனை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யூசப், “காஸா மிக மோசமான குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த உலகம் தன் மௌனத்தை கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version