Site icon Tamil News

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 3,000 பேர் உயிரிழந்த நிலையில் மேலும பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சில கிராமங்கள் அரசாங்க உதவிக்கு இன்னமும் காத்திருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து பெறப்படும் உதவிக்கு மொரோக்கோ வரம்பு விதித்திருக்கிறது.

ஸ்பெயின், பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய 4 நாடுகளின் மீட்புப் பணியாளர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உயிர் பிழைத்தவர்களுக்கு அரசாங்கம் உடனடி உதவிகளை அறிவித்துள்ளது. மீண்டும் வீடுகளைக் கட்டிக்கொள்ள நிதி உதவி அளிப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 30,000 திர்ஹாம் அவசர நிதி வழங்கப்படும் என்று மொரோக்கோ அரச மாளிகை கூறியது.

சுமார் 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. முற்றாக அழிந்த வீடுகளை மீண்டும் கட்ட 140,000 திர்ஹாம் தேவைப்படுகிறது. ஒருபகுதி சேதமடைந்த வீடுகளைக் கட்டித்தர 80,000 திர்ஹாம் தேவைப்படுகிறது.

Exit mobile version